tamilnadu

கேள்விக்குறியான பெண் குழந்தைகளின் பாதுகாப்பு? சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபர் போக்சோ சட்டத்தில் கைது

புதுக்கோட்டை, ஜூலை 25- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 7  வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மல்லி கைநத்தம் கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுமியின் உடலில் கடந்த 23-ஆம் தேதி காயம் மற்றும் வலி இரு ந்துள்ளது. இதனை அடுத்து சிறுமியின் தாய் மகளிடம் விசா ரித்துள்ளார். விசாரணையில் சிறுமியின் வீட்டருகே வசிக்கும்  கல்லூரி மாணவர் அரவிந்த் என்பவர் பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. சிறுமியை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்திலும் புகார்மனு அளித்துள்ளனர்.  வழக்குப் பதிவு செய்த போலீசார் அரவிந்தை தேடிய போது அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை என்பதால் வழக்கு புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அரவிந்தை தேடிவந்தனர். இந்நி லையில் சனிக்கிழமை அரவிந்தை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் கடந்த மாதம் 30  ஆம் தேதி 7 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் வசிக்கும்  இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட த்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். மீண்டும் கந்த ர்வகோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பெண் குழந்தைகளின் பாது காப்பு குறித்து பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.