tamilnadu

img

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்

 புதுக்கோட்டை, செப்.17- 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப் படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைக் கண்டித்து புதுக் கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று கல்லூரி மாண வர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிராகவும், தமிழக அரசின் அறி விப்பை எதிர்த்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி னர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாண வர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாலமுருகன், செயலாளர் எஸ். ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.