tamilnadu

img

கோடை கால நீண்ட பகல் நாளான சூரிய கிரகண நிகழ்வு

புதுக்கோட்டை, ஜூன் 21- புதுக்கோட்டையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் தொலை நோக்கி கொண்டு சூரிய கிரகணத்தை பார்க்கும் நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் கே.சதாசிவம் தலைமை வகித்தார். நிகழ்வை மாநில செயற்குழு உறுப்பினர்கள் லெ.பிரபாகரன், அ.மணவாளன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அறிவியல் இயக்க முன்னாள் மாநில செயலாளர் ஆர்.விவேகானந்தன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார், நேரு யுவ கேந்திரா கணக்காளர் ரெ.நமச்சிவாயம், அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் மா.குமரேசன், மாவட்ட இணைச் செயலர் டி.விமலா பங்கேற்றனர்.  இதுகுறித்து மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபாகரன் கூறியது: சூரியக் கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமிக்கிடையில் சந்திரன் சூரிய ஒளியை மறைப்பதால் நிலவின் நிழல் பூமியின் குறிப்பிட்ட பகுதிகளில் விழுவதாகும். இது ஓர் அறி வியல் பூர்வ இயற்கை நிகழ்வு. இதனால் பொது மக்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வழக்கம் போல வெளியில் வந்தாலோ, தண்ணீர் அருந்தினாலோ, உணவு உண்ணுவதாலோ எந்த வித பாதிப்பும் ஏற்படும் என்பதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் ஏது மில்லை.  எனவே வழக்கம் போல அவரவர் பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் இது கோடை கால நீண்ட பகல் நாளாகும். காலை 5.44 முதல் மாலை 6.38 வரை பகல் நேரமாகும். மொத்த பகல் நேரம் 12 மணி 54 நிமிடங்கள் ஆகும் என்றார். முன்னதாக மாவட்டச் செய லாளர் மு.முத்துக்குமார் வரவேற்க, துணைத் தலை வர் எம்.வீரமுத்து நன்றி கூறினார்.