புதுக்கோட்டை, ஆக.12- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே தலித் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இளை ஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை அடுத்த மஞ்சப்பேட்டை யைச் சேர்ந்த தலித் பெண் கண்ணகி. இவர் கடந்த ஆக.9 அன்று தஞ்சாவூ ருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு ஊருக்குத் திரும்பியுள்ளார். தஞ்சா வூரிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் பேருந்தில் தெத்துவாசல் பட்டி என்ற இடத்தில் இரவு 8 மணியள வில் இறங்கியுள்ளார். அங்கிருந்து அடுத்த அரைமணி நேரத்தில் ஊருக்குச் செல்லும் நகரப் பேருந்துக்காக காத்தி ருந்துள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த பழனிச்சாமி உடையார் மகன் குபேந்தி ரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தனது வாகனத்தில் ஊரில் கொண்டுபோய் இறக்கிவிடுவதாகக் கூறியுள்ளார். தனது ஊரைச் சேர்ந்த தெரிந்த நபர்தான் என்று நம்பி அவ ருடன் இருசக்கர வாகனத்தில் சென் றுள்ளார். ஆனால், நேராக ஊருக்குச் செல்லாமல் இடையில் உள்ள முந்தி ரிக்காட்டுக்குள் வண்டியைத் திருப்பி யுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கண் ணகி அலறி சத்தம் போட்டுள்ளார். அப்போது தலித் பெண்ணாகிய கண் ணகியை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதோடு இணங்க மறுத்தால் கொலை செய்துவிடுவதாக வும் மிரட்டியுள்ளார். அதற்கும் மறுத்து கூச்சல்போடவே கண்ணகியை அடித்தும், சேலையைக் கிழித்தும் பாலியல் ரீதியாக கடுமையாக துன்புறுத்தியுள்ளார். அப்போது, வலுக்கட்டாயமாக அவனை உதறித்தள்ளிவிட்டு தப்பி மிகுந்த சிரமத்துக்கு இடையில் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்துள்ள சம்பவத்தை விளக்கி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குபேந்திரன் அடித்ததில் படுகாய மடைந்த கண்ணகி தற்பொழுது புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் கூறியபோது, தலித்பெண் மீது இத்தகைய கொடூரத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறை இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறையின் மெத்தனப் போக் கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேற்படி குற்றவாளியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உட னடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.