வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
புதுக்கோட்டை, ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்டம் வாணக்கன்காடு கிரா மத்தைச் சேர்ந்தவர் சி.திருநாவுக்கரசு. இவரது வீட்டின் மீது திங்கள்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டி ருந்த ஒரு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. திரு நாவுக்கரசு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இது குறித்து மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக வடகாடு காவல் நிலை யத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலி மதுபானம் தயாரித்த 3 பேர் கைது
புதுக்கோட்டை, ஜுலை 22- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அய்யம் பட்டியில் சின்னையா என்பவரது வீட்டில் போலி மதுபான தயாரிப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு காவலருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து திங்கள்கிழமை அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது போலி மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் மற்றும் 528 போலி மதுபாட்டில்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த வீட்டிலிருந்த ஆலங்குடியைச் சேர்ந்த பாலு, செந்தில்குமார் மற்றும் ஜெபராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த தப்பி ஓடிய மெர்லின் சகாயராஜ் மற்றும் வீட்டின் உரிமையாளர் சின்னையா ஆகியோரை தேடி வருகின்றனர்.
தெளிப்பு நீர் பாசன கருவி பெறலாம்
பொன்னமராவதி, ஜூலை 22- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டா ரத்தில் வேளாண் துறை சார்பில் மானிய சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன கருவிகள் 100 சதவீத மானியத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மழை குறைந்த தால், நீர் தேவை குறைவாக தேவைப்படும் பயிர்களான உளுந்து மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்யலாம். மேலும் இக்கருவிகள் பெற, அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் தூர்வாரும் பணி இளைஞர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர், ஜூலை 22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள சுமார் 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளம், பல ஆண்டு களாக தூர்வாரப்படாமல் மண்மேடாகவும், வரத்துவாரி களும் அடைபட்ட நிலையில், வறண்டுபோய் காணப் பட்டது. பேராவூரணி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய பெரியகுளத்தை, இப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து தூர்வார முடி வெடுத்தனர். இதனையடுத்து பெரியகுளத்தை கடந்த 30 நாட்க ளாக பேராவூரணி பெரியகுளத்தை கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த இளை ஞர்கள் தூர்வாரி வருகின்றனர். முதற்கட்டமாக பெரிய குளத்தின் கரைகளை உயர்த்தியும், ஆழ, அகலப்படுத்தி யும், செப்பனிட்டு கரைகளில் புங்கை, வேம்பு, பனை, போன்ற மரக் கன்றுகளை நட்டு வருகின்றனர். இதுகுறித்து கேட்டறிந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட பெரிய குளத்திற்கு வந்தார். அப்போது அவரை பேராவூரணி கடை மடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க அமைப்பி னர் தங்க.கண்ணன், கார்த்திகேயன், நவீன், ஆனந்த், நிர்மல் வரவேற்றனர். இதன்பின் நீதிபதி “முயற்சியை இடைவிடாமல் செய் யுங்கள். பலனை எதிர்பார்க்க வேண்டாம். பலன் தானா கவே வந்தடையும். உங்களுடைய செயல் மற்ற வர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. ஒவ்வொரு சேவை அமைப்புகளும் தாங்களாகவே முன்வந்து இது போல் குளங்களை தூர்வாரினால் தண்ணீர் பற்றாக்குறை வராது” என வாழ்த்துக்களை தெரிவித்தார். இளைஞர்கள் முயற்சியால் ஒட்டங்காடு, ஆண்டிக்காடு பகுதியிலும் தூர்வாரும் பணி நடப்பதைக் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்கள் முயற்சியில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மறமடக்கி, வடகாடு பகுதிகளில் குளங்களை தூர்வாரும் பணியை பார்வையிடச் சென்றார். முன்னதாக குளக்கரையில் நீதிபதி மற்றும் அவ ரது குடும்பத்தினர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
புதுகை ஆலங்குடி பகுதியில் தைல மரக்கன்றுகளை நட எதிர்ப்பு
புதுக்கோட்டை, ஜூலை.22- தைல மரக்காடுகள் வளர்க்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டுமின்றி, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி அனல் காற்றை தைல மரங்களும், சீமைக்கருவேல மரங்க ளும் வெளியிடுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரி விக்கின்றனர். எனவே, தைலமரக் காடுகளை முற்றாக அழித்துவிட்டு, பல்லுயிர் பெருக்கத்திற்கு உகந்த இயற் கைக் காடுகளை உருவாக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தனபதி தலை மையில் பிரச்சார கலைப்பயணம் கிராமங்கள் தோறும் கடந்த 20 நாளாக நடைபெற்று வருகிறது. 20வது நாள் பிரச்சாரத்தை பனங்குளம் கிராமத்தில் தொடங்கி வைத்த ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்ய நாதன் பேசியது: ஆலங்குடி தொகுதியில் பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முந்திரிக்காடுகள் உள்ளன. தற்போது வனத்துறையினர் அந்தக் காடுகளை அழிக்க தொடங்கி இருக்கின்றனர். அதில் தைல மரக்கன்றுகளை நடவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அழிக் கப்படும் முந்திரிக்காட்டில் பலவகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று இளைஞர்கள் மனு கொடுத்தி ருக்கிறார்கள். இதையும் மீறி வனத்துறையினர் தைல மரக்கன்றுகளை நட முயன்றால் மக்களை திரட்டி போராட் டம் நடத்துவோம் என்றார்.
மாதர் சங்கப் பேரவை
அரியலூர், ஜூலை 22- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாதர் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் ஒன்றிய தலைவர் ஆர். மணியம்மை தலைமையில் நடைபெற்றது. ஆர்.தன லட்சுமி, கே.சுசிலா எஸ்.தேவி, கே.அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் எஸ்.கீதா மாவட்டத் தலைவர் எஸ்.பாக்கியம் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.மீனா மாவட்ட துணைத்தலைவர் எ.கலை யரசி, மாவட்ட செயலாளர் பி.பத்மாவதி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். பின்னர் 17 உறுப்பினர்கள் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக எ.ராதா நன்றி கூறினார்.