tamilnadu

img

நோய்கள் பாதித்த நெற் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, ஜன.29- புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி கடைவீதியில் விவசா யிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். அறந்தாங்கி தாலுகா முழுவதும் பயிரிடப்பட்ட நெற்பயிர்களில் யானைக் கொம்பன், குலைநோய், இடைப் பலம் என்ற பூஞ் சைக்காளான் நோய்களால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு இழப்பை சரி செய்ய வேண்டும். பயிர்களை பார்வையிட்டு உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட் டவை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றிய துணைத் தலைவர் எம்.மேக வர்ணம், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய செயலா ளர் ஏ.செல்லமுத்து ஆகி யோர் தலைமை வகித்தனர். வி.ச. ஒன்றிய செயலாளர் எம்.தர்மராஜ், வி.தொ.ச. ஒன்றிய செயலாளர் வி.ராசு முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சங்கர் சிறப்புரை ஆற்றினார். வி தொ.ச மாவட்ட துணைச் செயலாளர் வே.வீரையா, சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிர மணியன், அறந்தாங்கி தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, விதொ.ச. சாத்தையா, ராதா, வி.ச. முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.