பொன்னமராவதி, ஜூன் 3-அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர்சங்கம், இந்திய மாணவர் சங்கம்ஆகியவற்றின் சார்பாக பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக எஸ்.எப்.ஐ மாவட்டக் குழு உறுப்பினர் கே.அனுசுயா, வாலிபர் சங்க ஒன்றிய துணை செயலாளர் எம்.ரஜினிஆகியோர் தலைமையில் கவன ஈர்ப்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை நாராயணன் சிறப்புரையாற்றினர். வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் கே.குமார்,என்.பக்ருதீன், விதொச பொறுப்பாளர் சாத்தையா, மாதர் சங்க லட்சுமி,ஆட்டோ ஊழியர் சங்க பொறுப்பாளர் மணிமாறன், மாணவர் அமைப்பின் ஹைதர்அலி, வாலிபர் சங்க ஆறுமுகம், சிவா, விஜய் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.