புதுக்கோட்டை, செப்.30- 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் திங்கள்கிழமையன்று சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. தெகுநாதபுரம் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 10 நாட்க ளுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதற்கு அந்தப் பகுதி யில் உள்ள மின்மாற்றி பழுதடைந்ததே காரணம் எனக் கூறப்படு கிறது. மேலும், வடிகால் வசதில் இல்லாததால் சமீபத்தில் பெய்த மழைநீர் ஊருக்குள் தேங்கி பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக குடிநீர் வழங்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தித்தரவும் வலியுறுத்தி திங்கள்கிழமையன்று ரெகு நாதபுரம் புதுவிடுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரி பாஸ்கர், இளமாறன், ராஜேந்திரன், இளவரசு, கிளைச் செயலாளர் தியாகராஜன் மற்றும் கிராமப் பொதுமக்கள் பங்கேற்றனர். பேராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ், கறம்பக்குடி காவல் ஆய்வா ளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவள்ளி, உதவி மின் பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். உடனடியாக மின்மாற்றியை சரிசெய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வது என்றும், வாய்க்கால் தூர்வாரப்பட்டு கழிவுநீரை வெளி யேற்றும் பணியை தற்பொழுதே தொடங்குவது எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இததைத் தொடர்ந்து கறம்பக்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.