tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் வரை போராடுவோம்

ஏகலைவனின் எதிர்க்குரலாய் முழங்கியது தமுஎகச கல்வி உரிமை எழுச்சி மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஆக.23- மத்திய மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை முற்றாக திரும்பப்பெறும் வரை போராடுவோம் என திருச்சியில் நடை பெற்ற தமுஎகச மாநாடு முழக்கமிட்டது. தமிழ்நாடு  முற்போக்கு எழுத்தாளர்  - கலை ஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலைஞர் அறி வாலயத்தில் கல்வி உரிமை மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது.  நினைவுச்சுடர்கள் சங்கமத்தைத் தொடர்ந்து ஏகலைவனின் எதிர்குரல் சிறப்பு கலை நிகழ்ச்சியில்  குமரி முரசு கலைக்குழுவினர் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான தப்பாட்ட கலை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதனை பிரளயன், உமா ஆகி யோர் ஒருங்கிணைத்தனர். மாநாட்டில் கல்வி வளர்ச்சி சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.

வரைவு அறிக்கையை படித்தால் தூக்கம் வராது

பின்னர் காலை 10 மணியளவில் மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு தமுஎகச கௌரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். “புதிய கல்விக் கொள்கை மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி உள்ள சூழலில் இந்த விவாதத்தை துவக்கி வைத்த அமைப்புகளில் நாமும் ஒன்று என்ற பெருமையுடன் இந்த மாநாட்டை துவங்குகின்றோம். நிதி ஆயோக் போல் கல்விக்கும் ஒரு ஆயோக் உருவாக்கப் படுகிறது. புதிய கல்விக் கொள்கையில் திருத்து வதற்கு ஒன்றும் இல்லை. அதனை முழுமை யாக நிராகரிக்க வேண்டும். அனைத்து அரசியல், பொது இயக்கங்களும் இதனை சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தமுஎகச கேட்டுக் கொள்கிறது. கல்வி உரிமை சூழலை முற்றிலுமாக தரைமட்டமாக்க புதிய  கல்விக் கொள்கை முன்வைக்கிறது.வரை வறிக்கையை படிக்காத வரை தான் நிம்மதி யாக இருக்க முடியும். படித்தால் தூங்க முடி யாது. எதிர்கால குழந்தைகளின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரித்து வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும்” என்றார் ச.தமிழ்செல்வன்.

எதற்கும் ஒரு முடிவு உண்டு

வரவேற்புக் குழு செயல் தலைவர் கவிஞர் நந்தலாலா வரவேற்றார். சிறப்பு விருந்தினரை கௌரவித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அப்போது “இந்த நிகழ்ச்சி  இங்கு நடைபெற்றதால் கலைஞர் அறிவா லயம் கட்டியதின் நோக்கம் நிறைவேறியது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண மான நிலையை விளக்கி அனைவரும் ஏற்கத்தக்க வகையில் இந்த மாநாடு நடைபெறு கிறது. இதை அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ், கல்வியாளர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும். எழுத்தாளர் களால் எதையும் எழுதவும், சந்தைப்படுத்தவும் முடியும். உங்களது முயற்சி வெற்றிப் பெற வேண்டும். அவர்கள் வைத்ததே சட்டம் என்று மத்திய அரசு நடக்கிறது. எதற்கும் ஒரு முடிவு உண்டு. இதற்கும் ஒரு முடிவு வரும்” என்றார் கே.என்.நேரு.

நீதிபதி சுதர்சன் ரெட்டி
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன்ரெட்டி தொடக்க உரையாற்றினார். அவரது உரையை அ.அன்வர் உசேன் தமிழாக்கம் செய்தார். இந்நிகழ்வுகளை நா.முத்து நிலவன் தொகுத்து வழங்கினார். பின்னர் நடைபெற்ற தெளிவரங்கத்தில் ஒடுக்கும் கல்வியும், விடுதலைக் கல்வியும் என்ற  தலைப்பில் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசன் பேசினார். மறுக்கப்படும் சமூக நீதி என்ற  தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் அருணனும், அரசியல் சட்டத்தை மறுக்கிறதா என்ற தலைப்பில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவும் பேசினர். இந்நிகழ்வுகளை மணிமாறன் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் வரைவறிக்கையை தமிழாக்கம் செய்தவர்களுக்காக எழுத்தாளர் விழியனை தமுஎகச மாநிலப் பொருளாளர் சு.ராமச்சந்திரன் கௌரவித்தார். முனைவர் தா.சந்திரகுரு எழுதிய தேசிய கல்விக் கொள்கை -  2019 பின்னணியின் மர்மங்கள் என்ற நூலை  மருத்துவர் கோவிந்தராஜ் வர்த்தனர் வெளியிட, அதனை பனானா லீப் ரெஸ்டாரண்ட் மனோ கரன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வுகளை கவிஞர் ஸ்டாலின் சரவணன் ஒருங்கிணைத்தார்.  குழந்தைகளின் மூளை வளர்ச்சித் திறன் என்ற கணினி விளக்கக் காட்சியை மருத்துவர் திருப்பதி விளக்கினார். இந்நிகழ்வை லட்சுமி காந்தன் ஒருங்கிணைத்தார். 

பின்னர் மதியம் 2 மணியளவில் கலை களும், கல்வியும் என்ற தெளிவரங்கம் நடை பெற்றது. இதில் திரைப்பட நடிகர் ரோகிணி பங்கேற்று பேசினார். சமூக உரையாடலாகக் கல்வி என்ற தலைப்பில் இயக்குனர் பா.ரஞ்சித், இருப்பதுவும், வருவதுவும் என்ற தலைப்பில் எழுத்தாளர் கீதா ஆகியோர் பேசினர். இந்நிகழ்வை அ.குமரேசன் தொகுத்து வழங்கினார். முனைவர் சந்திரசேகரன் வாழ்த்துரை வழங்கினார்.  பிற்பகல் 3.15 மணியளவில் பழங்குடி யினரின் கல்வி உரிமை என்னவாகும்? என்ற தலைப்பில் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க  பேராசிரியர் கல்யாணி, மாணவர் கண்ணோட்ட த்தை மறுக்கும் வரைவறிக்கை என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் வீ.மாரியப்பன், பள்ளி கல்விக்கு நேரும் பாதகங்கள் என்ற தலைப்பில் ஜாக்டோ ஜியோ நிதிக் காப்பாளர் ச.மோசஸ், உயர்கல்வி இனி  யாருக்கு? என்ற தலைப்பில் அகில இந்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க தேசிய செயலாளர் சுப்பாராஜ், சிறு பான்மையினர் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள் ளும் அபாயங்கள் என்ற தலைப்பில் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் தாவூத் மியாகான் ஆகியோர் பேசினர். இந்நிகழ்வுகளை உமா மகேஸ்வரி தொகுத்து வழங்கினார்.

தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா நிறைவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரங்கராஜன் நன்றி கூறினார். பின்னர் மாலை மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் என்ற பொது நிகழ்வு நடைபெற்றது.