tamilnadu

img

வர்த்தக போர் எதிரொலியாக ரூ.3,207 கோடி விலக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவும் வர்த்தக போர் மற்றும் இந்தியாவின் மக்களவை தேர்தல் காரணமாக நடப்பு மாதத்தில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ரூ.3,207 கோடி முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளனர். 

இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவு முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் என்று மொத்தம் ரூ.11,182 கோடியும், மார்ச் மாதத்தில் ரூ.45,981 கோடியும், ஏப்ரல் மாதத்தில் ரூ.16,093 கோடியும் முதலீடு செய்துள்ளனர்.  

ஆனால், நடப்பு மாதத்தில், கடந்த 2-ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதி வரை மட்டும் வெளிநாடு முதலீட்டாளர்கள் ரூ.1,344.72 கோடி முதலீடு செய்துள்ளனர். ஆனால் இதுவே கடன் சந்தையில் இருந்து ரூ.4,552.20 கோடியை வெளியேற்றியுள்ளனர். இதன்மூலம் நிகர வெளியேற்றம் ரூ.3,207.48 கோடியாக உள்ளது. 

இது குறித்து, சந்தை நிபுணர்கள் கூறுகையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால், இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் அடையலாம், இதனால், இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என்றும், ரூபாய் மதிப்பு சரிந்தால் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். 

மேலும், அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவும் வர்த்தக போர் மற்றும் இந்தியாவின் மக்களவை தேர்தல் ஆகிய முக்கிய காரணங்களால் முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.