tamilnadu

img

வடசென்னையில் மார்ச் மாதம் மின் உற்பத்தி

சென்னை,நவ.19- வடசென்னையில் 800 மெகாவாட் திறன்  கொண்ட அனல் மின் உற்பத்தித் திட்டத்தை  முதலமைச்சர் வரும் மார்ச் மாதம் தொடங்கி  வைப்பார் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். காட்பாடியில் மின்வாரிய மண்டலங்க ளுக்கு இடையே நடைபெற்ற விளை யாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி. வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்ட னர். பின்னர் பேசிய தங்கமணி,  படிப்படி யாக அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை  தொடங்கும் போது 2025 ஆம் ஆண்டுக்குள்  தமிழகத்திற்கு 6,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும் என்றார்.