தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவத்தைஓரவஞ்சனையோடு அணுகுகிறது ஒன்றிய அரசு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவத்தை, ஒன்றிய அரசு ஓரவஞ்சனையோடு அணுகி வரு கிறது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார். பெரம்பலூரில் விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்வது என்பது தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாகும். வேளாண்மையில் இந்த அரசு எவ்வளவு அக்கறை செலுத்து கிறது என்பதற்கு இது ஒரு சான்று. கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது வரவேற்கக் கூடிய ஒன்று. இலங்கை கடற்படையினர் தொ டர்ந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத் திருக்கிறது. இந்த பிரச்சனையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு ஆர்வம் காட்டவில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சனை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். ஒன்றிய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனையை சமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலி மையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடு இணக்கமான அர சாகவும் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டு மக்களின், தமிழ்நாட்டு மீன வர்களின் பிரச்சனையை ஓரவஞ்சனை யோடு அணுகுகிறது என்பதுதான் இந்த பிரச்சனை தொடர்வதற்கு காரண மாகும்” என தெரிவித்தார்.
கரூர் அப்போலோ மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் கரூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.