புதுச்சேரி 2026: மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிரமிப்பு
மக்கள் மன்றத்தில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!
புதுச்சேரி இந்தியாவின் மிகச்சிறிய நிலப்பரப்பான புதுச்சேரி யூனியன் பிரதேசம், வரும் ஏப்ரல் 9 அன்று தனது 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை எதிர்கொள்கி றது. இத்தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற் கான களமல்ல; மாறாக, புதுச்சேரியின் தன்னுரி மையும் ஜனநாயக மாண்புகளும் ஒன்றிய பாஜக அரசின் அதிகார ஆக்கிரமிப்பால் சிதைக்கப்படு வதைத் தடுப்பதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அறப்போராக உருவெடுத்துள்ளது. கடந்த ஐந்தாண்டு கால என்டிஏ (என்ஆர் காங்கிரஸ் - பாஜக) ஆட்சியில் புதுச்சேரியின் நிர்வாகம் முற்றிலுமாக ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு பொம்மை அரசாங்கமாக மாற்றப்பட்டதும் வாக்காளர்கள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்ட அதிகாரப் பறிப்பு மற்றும் நேரடித் தலையீடு புதுச்சேரியில் கடந்த பத்தாண்டுகளில் பாஜக முன்னெடுத்த அரசியல் என்பது தேர்தல்க ளில் வெற்றி பெறுவதல்ல, மாறாக குறுக்கு வழி யில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஆகும். 2016இல் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக, 1963ஆம் ஆண்டு யூனியன் பிரதேசங் கள் சட்டத்தைப் பயன்படுத்தி மூன்று நியமன எம்எல்ஏ-க்களைத் தன்னிச்சையாக நியமித்தது. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை யில் 10 சதவீத பலத்தை கொல்லைப்புற வழியாக பாஜகவிற்கு வழங்கியது. கிரண் பேடி முதல் ஒன்றிய அரசின் தற்போ தைய விசுவாசியான கே.கைலாசநாதன் வரை, அனைத்து துணை நிலை ஆளுநர்களும் புதுச் சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச் சரவையை முடக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, குஜ ராத் முதலமைச்சர் அலுவலகத்தில் நரேந்திர மோடியுடன் 18 ஆண்டுகள் பணியாற்றிய கே. கைலாசநாதன் ஆளுநராக நியமிக்கப்பட்டது, புதுச்சேரியின் உரிமைகளை முற்றிலுமாகப் பறிக்கும் ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிர மிப்பின் உச்சகட்டமாகும். 2021இல் நான்கு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களைக் கட்சித் தாவல் செய்ய வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணசாமி அரசாங்கத்தைக் கவிழ்த்தது பாஜகவின் ஜனநாயக விரோதப் போக்கிற்குச் சான்று. மாநில அந்தஸ்து மற்றும் நிதி நெருக்கடி: ஒரு தொடர் ஏமாற்றம் 15 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மாநில அந் தஸ்து பற்றிப் பேசிய பாஜக, ஆட்சிக்கு வந்த பிறகு மௌனம் காப்பது அதன் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. புதுச்சேரியின் நிதி ஆதாரம் என்பது பெரு மளவில் ஒன்றிய அரசின் கருணையையே சார்ந்துள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் க. லட்சுமிநாராயணன் வெளிப்படையாகவே,”நிதி வேண்டுமென்றால் பாஜகவுடன் இருக்க வேண்டும்” என்று கூறியிருப்பது, மாநிலத்தின் தன் னாட்சி உரிமையை ஒன்றிய அரசு எவ்வாறு நிதி ரீதியாக அச்சுறுத்திப் பணிய வைக்கிறது என்பதற்குச் சான்று. மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் தீவிர முயற்சி, புதுச்சேரியை ஒரு பரிசோதனைக் கூடமாக மாற்றும் போக்கையே காட்டுகிறது. கொள்கை வழி நிற்கும் இடதுசாரிகள்: சமரசமற்ற போராட்டக் களம் இந்தத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குள் நிலவிய தொகுதிப் பங்கீட்டு இழுபறிகளால், சிபிஐ(எம்) மற்றும் சிபிஐ ஆகிய கட்சிகள் இம்முறை தனித்து வமான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இது ஒரு தற்காலிகத் தேர்தல் முடிவுக்கான நகர்வு மட்டு மல்ல, மாறாக புதுச்சேரியின் உழைக்கும் வர்க்கத் தின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான ஒரு கொள்கை முடிவு. சிபிஐ(எம்) புதுச்சேரி மாநிலக் குழு, கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் நலனுக்காகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள் ளது. குறிப்பாக, மின்சாரத் துறை தனியார்மய மாக்கலுக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திரட்டியது, 100 நாள் வேலைத் திட்டத்தில் நில வும் முறைகேடுகளைத் தட்டிக்கேட்டது மற்றும் பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அமல் படுத்த வலியுறுத்தியது என இடதுசாரிகளின் போராட்டக் களம் விரிவானது. பெரிய கட்சிகள் பண பலத்தையும், அதிகார பலத்தையும் நம்பித் தேர்தலைச் சந்திக்கும் வேளையில், இடதுசாரிகள் மட்டுமே கொள்கை ரீதியிலான பிரச்சாரத்தை முன்னெடுத்து வரு கின்றனர். ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்காகவும், பொது விநியோகத் திட்டத்தை மீட்கவும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. “மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசியலா அல்லது கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் அரசியலா?” என்ற கேள்வியை இடதுசாரிகள் மிகத் துல்லியமாக மக்கள் முன்னால் வைத்துள் ளனர். மாஹே, ஏனாம் மற்றும் புறக்கணிக்கப்படும் எல்லைப்புறப் பகுதிகள் புவியியல் ரீதியாகக் கேரளம் மற்றும் ஆந்தி ரப் பகுதிகளைச் சார்ந்துள்ள மாஹே மற்றும் ஏனாம் தொகுதிகளின் நிலைமை மிகவும் கவ லைக்கிடமாக உள்ளது. கேரளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள மாஹே தொகுதியில், சிபிஐ (எம்) ஆதரவு பெற்ற வேட்பாளர் வழக்கறிஞர் அசோக் குமார் வலுவான போட்டியை வழங்கு கிறார். கேரள இடது ஜனநாயக முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த வேட்பாளர், மாஹே மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் நிலவும் குளறுபடிகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்கிறார். ஏனாம் தொகுதியில் 2021இல் முதலமைச்சர் ரங்கசாமியை வீழ்த்திய சுயேச்சை வேட்பாளர் அசோக் இப்போது காங்கிரஸ் சார்பில் போட்டி யிடுகிறார். ஆந்திர அரசியலின் தாக்கம் நிறைந்த இப்பகுதியில், ஒன்றிய அரசின் புறக்கணிப்பி ற்குப் பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு மற்றும் ரேஷன் கடைகள் முடக்கம் புதுச்சேரியின் 9.44 லட்சம் வாக்காளர்களில் பெரும்பான்மையாக உள்ள பெண் வாக்கா ளர்கள், இந்தத் தேர்தலின் போக்கைத் தீர்மானிக் கும் சக்தியாக உள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,000-ஐத் தொட்டுள்ள நிலையில், பாஜகவின் வெற்று வாக்குறுதிகள் பெண்களிடம் எடுபடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரேஷன் கடைகள் திட்டமிட்டு முடக்கப்பட்டது மற்றும் உள்ளாட்சித் தேர்த லை நடத்தாதது போன்ற என்டிஏ அரசின் தோல்வி கள் இத்தேர்தலில் அவர்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். ஜனநாயகத்தைக் காக்கட்டும் மக்கள் தீர்ப்பு எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவது பாஜக கூட்டணிக்குச் சாதகமாக அமையும் எனப் பொய்ப் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள் ளன. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால “ஆளுநர் ஆட்சி” வழங்கிய கசப்பான அனுபவங்களை மக்கள் மறக்கவில்லை. ரங்கசாமி அரசாங் கத்தின் மீதுள்ள அதிருப்தி, 62% மக்கள் அவரை மீண்டும் முதலமைச்சராக விரும்புகிறார்கள் என்ற சில கருத்துத் திணிப்புகளைத் தாண்டி, அடிமட்ட அளவில் மிகத் தீவிரமாக உள்ளது. தொழிலாளர் விரோதக் கொள்கைகள், வகுப்புவாதப் பிரிவினைகள் மற்றும் மாநில உரி மைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் மேலா திக்கம் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு புதுச்சேரி வாக்காளருக்கும் உள்ளது. குறிப்பாக, இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவு, புதுச் சேரியில் ஒரு மாற்று அரசியலுக்கான வித்தாக அமையும். இந்தத் தேர்தல் புதுச்சேரியின் தனித்துவத்தைக் காப்பதற்கான ஒரு போர்க் களம். ஒன்றிய அரசின் அதிகார ஆக்கிர மிப்பைத் தகர்த்து, புதுச்சேரியின் மாநில உரி மைகளை மீட்க ஏப்ரல் 9 அன்று மக்கள் வழங்கும் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
