புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்த வேண்டும், உள்ளூர் மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும், தாமதமாக கட்டப்படும் கல்வி கட்டணத்திற்கு வசூலிக்கப்பட்ட அபராதத்தை மீண்டும் மாணவர்களிடம் வழங்க வேண்டும், மாணவர்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (01.10.2024) துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்று, அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.