புதுச்சேரியில் கோயில் நிலத்தை திரும்ப ஒப்படைக்க பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64,000 சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாகவும், இந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான மனுவில், நில அபகரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார், அவருடைய மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசார்ணையில், கோயில் நிலத்தை உடனடியாக கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் சிபிசிஐடி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.