புதுச்சேரி, ஜூலை 16- புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு 9 மாத கைக்குழந்தை இறந்தது. புதுச்சேரியில் வியாழனன்று புதிதாக 147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,743ஆக அதிகரித்துள்ளது. முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோவில் பகுதியை சேர்ந்த 9 மாத ஆண் குழந்தை கொரோனா தொற்று பாதிக்கப் பட்டு இறந்தது. இதையடுத்து இறந்தவர்க ளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.