பெரம்பலூர், நவ.24- பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் தாலுகா செட்டிகுளம் குன்னு மேட்டு காலனி பகுதியில் தலித் மக்க ளும், தலித் கிறிஸ்தவ மக்களும் என 100 க்கும் மேற்பட்ட குடும் பங்களுக்கு மேல் வசித்து வரு கின்றனர். அவர்களுக்கென தனி சுடு காடு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்க ளுக்கு முன்னர் அப்பகுதியை சேர்ந்த தலித் முதியவர் நடேசன் (75) என்பவர் இறந்து விட்ட போது அவரது இறுதிச்சடங்கு செய்வ தற்காக அப்பகுதி தலித் மக்கள் வழக்கம் போல் மயானத்திற்கு சட லத்தை தூக்கி சென்றுள்ளனர். அப் போது அதே செட்டிகுளம் கிரா மத்தை சேர்ந்த சாதி ஆதிக்க நபர்கள் 40க்கும் மேற்பட்டோர் தலித் மக் களை வழிமறித்து இந்த பாதையில் நீங்கள் சுடுகாட்டிற்கு செல்ல அனு மதிக்க மாட்டோம் எனக் கூறினர். அதற்கு தலித் மக்கள், நாங்கள் தலைமுறை தலைமுறையாக இந்த பாதையில் தான் மயானத்திற்கு சென்று வருகிறோம் அந்த பாதை யை தவிர மயானத்திற்கு செல்ல எங்களுக்கு வேறு பாதை இல் லையே. நாங்கள் எப்படி சுடு காட்டிற்கு செல்ல முடியும் எனக் கேட்டனர். அதற்கு இந்த பாதை எங்களது குடும்பத்தார் பெயரில் பட்டாவாக உள்ளது. எனவே இந்த பாதையில் சடலத்தை தூக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி சாதி ஆதிக்க நபர்கள் தடுத்தனர். இதைதொடர்ந்து இறந்தவர் சடலத்தை சம்பந்தப்பட்ட இடத்தில் இறக்கி வைத்து விட்டு தலித் மக் கள் ஆலத்தூர் வட்டாட்சியர் மற்றும் பாடாலூர் காவல் துறைக்கும் தக வல் கொடுத்துள்ளனர். பின்னர் வட்டாட்சியர் தலைமையில் அதி காரிகளும் காவல் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தலித் மக்களை சமாதானப்படுத்தி அருகாமையில் உள்ள ஓடை வழி யாக தற்காலிகமாக பிணத்தை தூக்கி சென்று அடக்கம் செய்யுங் கள் என்றும், உடனடியாக இரு தரப்பினரும் வட்டாட்சியர் அலு வலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி பாதை பிரச்சனைக்கு சுமூக முடிவெடுக்கலாம் எனக் கூறி சென்று விட்டனர். ஆனால் சாதி ஆதிக்க சக்தி கள் மறுநாளே பாதையினை மறித்து கம்பி வேலி அமைத்து கேட் போட்டு பூட்டி விட்டனர். உடனடியாக தலித் மக்கள் வட்டாட்சியருக்கும் காவல்துறைக்கும் புகார் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். பின் னர் 19.11.2019 அன்று ஆலத்தூர் வட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையின் போது பாதையை மறித்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க முடியாது என சாதி ஆதிக்க நபர்களுக்கு ஆதர வாக செயல்படும் விதமாக, பாதை செல்லும் பகுதி அவர்கள் பெயரில் பட்டாவாக உள்ளது; எனவே தலித் மக்கள் மயானத்திற்கு செல்ல வேறு பாதை அமைத்து தருவதாக கூறி பேச்சு வார்த்தையினை முடித்து விட்டார். ஆனால் வட்டாட்சியர் கூறிய வழியில் அங்காயி கோயில் அமைந் துள்ளதால் அங்கு பாதை அமைக் கப்படும் பட்சத்தில் அதனை வழி படும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உள்ள நிலையில் தலித் மக்க ளுக்கு வட்டாட்சியர் உறுதி மொழி அளித்தபடி பாதை அமைத்துத் தர வழியில்லை. எனவே சுடு காட்டிற்கு செல்ல வழியில்லாததால் தலித் மக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர். மேலும் இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க் சிஸ்ட் கட்சியினரிடம் தகவல் தெரி வித்ததை தொடர்ந்து தீ.ஒ.மு. மாவட்டத் தலைவர் என்.செல்ல துரை, சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம், தீ.ஒ.மு. மாவட்டச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் தனிப்பிரிவு, மற்றும் மாவட்ட ஆட்சி யர், எஸ்.சி.எஸ்.டி மாநில கமிஷனர் உள்ளிட்ட துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.