tamilnadu

img

மின்வாரியம் பொதுத் துறையாக நீடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.24- பெரம்பலூரில், மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலு வலகம் முன்பு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் வட்ட தலைவர் சம்பத் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜகுமாரன், ராமர், ஜெயபால், செந்தாமரை, சடையன், பிச்சை பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் முரு கேசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி கிருஷ்ணசாமி, மின் ஊழி யர் மத்திய அமைப்பு வட்டச் செயலா ளர் பன்னீர் செல்வம் உட்பட பலர் பேசினார். மாநில துணைத் தலைவர் பஷீர், அமைப்பு வட்ட செயலாளர் கணேசன், பொருளாளர் முத்துசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மின் வாரி யத்தை பொதுத்துறையாக நீடித்திட வேண்டும். புதிய பென்சன் திட்டத் தை ரத்து செய்திட வேண்டும். 3 சதவீத வைர விழா சலுகை பெற்றிட வேண்டும். மருத்துவ காப்பீட்டுத் திட்டக் குறை பாடுகளைக் களைந்து, மின் வாரியமே ஏற்று நடத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்திப்பட்டன. வட்ட நிர்வாகி கண்ணையன் நன்றி கூறினார்.