பெரம்பலூர், ஜூலை 7- தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனைத் துக் கட்சிகளும் ஒருங்கி ணைந்து மக்களவையில் குரல் கொடுப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமா வளவன் எம்.பி. கூறினார். பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை சார்பில் பெரம்பலூ ரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற முப்பெரும் விழா வில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் பேசுகை யில், “சுற்றுச்சூழல் பாதுகாப் புக்காக நீண்ட காலமாக போராடி வருபவர் முகிலன். அவர், தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடை பெற்ற துப்பாக்கிச்சூடு சம்ப வம் தொடர்பாக சில வீடியோக் களை வெளியிட்ட பிறகு திடீ ரென காணாமல் போனது அனைவரையும் அதிர்ச்சிய டையச் செய்தது. இச்சம்ப வம் பல்வேறு சந்தேகங்க ளையும் கிளப்பியது. இந்தச் சூழலில், அவர் இப்போது உயிரோடு இருப்பதாக கிடைத்த தகவல் என்னைப் போன்ற பலருக்கும் ஆறுத லாக உள்ளது. உடல் நலி வுற்றுள்ள அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, அவரது குடும்பத்தி னரிடம் ஒப்படைக்க வேண் டும்” என்றார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு அனுப்பிய 2 தீர்மானங்களை மத்திய அரசு அண்மையின் நிராகரிப்பதாக அறிவித்தி ருப்பது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. தமிழக அரசு மீண்டும் சட்டப் பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர் மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதே அனைத்துக் கட்சி களின் நிலைப்பாடு. எனவே, கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்களவையில் குரல் கொடுப்போம் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.