பாட்னா:
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பீகார் மாநில ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதாதளத்தின் (ஜேடியு) துணைத்தலைவராக இருந்து வந்தார். குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீரின் 370-வது பிரிவு நீக்கம் ஆகியவற்றில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது, மத்திய அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்த நிலையில், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத பிரசாந்த் கிஷோர், சொந்தக் கட்சியின்மீதே கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். இதுதொடர்பான முரண்பாடு முற்றிய நிலையில், பிரசாந்த் கிஷோரை, ஜேடியு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், கடந்த மாதம் கட்சியிலிருந்தே நீக்கிநடவடிக்கை எடுத்தார்.இந்நிலையில், திங்களன்று பாட்னாவில்செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த பிரசாந்த்கிஷோர், “ ஒரேநேரத்தில் நாதுராம் கோட்சே-வாகவும்,மகாத்மா காந்தியாகவும் எவ்வாறு இருக்கமுடியும்?” என்று நிதிஷ் குமாருக்கு கேள்விஎழுப்பியுள்ளார்.நிதிஷ்குமார் பாஜகவுடன் இருக்க விரும்பினால் எந்தப் பிரச்சனையும் இல்லை; ஆனால்,அவர் இரு தரப்பிலும் இருக்க முடியாது.நாதுராம் கோட்சேவை ஆதரிக்கிறாரா அல்லது மகாத்மா காந்தியின் பாதையில் செல்கிறாரா என்பதை நிதிஷ் குமார் தெளிவாகக் கூறுவது அவசியம்” என்றும் கிஷோர்கூறியுள்ளார்.