tamilnadu

img

தமிழகத்தில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

சென்னை, ஆக. 31- வாக்காளர் பட்டியலில் பிழைகள் ஏதும்  இல்லாமல் தயாரிக்கத் தேர்தல் ஆணையம்  முடிவு செய்துள்ளது. அதன் படி, வாக்காளர்  பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் ஞாயிறன்று  (செப்.1)  முதல்  நடைமுறைப்படுத்தப்படு கிறது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில் கூறியிருப்பதாவது:- வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1-தேதிக்குள் 18 வயது பூர்த்தி அடைவோர்  தங்களது பெயர்களை வாக்காளர் பட்டி யலில் சேர்க்கலாம். இது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வரும் நடை முறை ஆகும். இந்த ஆண்டு வாக்காளர் பட்டிய லில் பிழைகள் ஏதும் இல்லாமல் தயா ரிக்கத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன் படி, வாக்காளர் பட்டி யல் சரிபார்ப்புத் திட்டம் ஞாயிற்றுக்  கிழமை (செப்.1) முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தின்படி வாக்காளர்கள் 5 வகையான வழிமுறை களின் மூலமாக வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட விவரங் களைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

1950 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என்.எஸ்.வி.பி. என்ற செல்போன் செயலி, தனி இணையதளம், பொதுச் சேவை மையங்கள், வாக்காளர் சேவைப்பிரிவுகள் ஆகியவற்றுக்குச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரி பார்த்துக்கொள்ளலாம். பிழைகள் ஏதும் இருந்தால் தேர்தல்  ஆணையம் வரையறுத்துள்ள ஆவணங்க ளில் ஏதேனும் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும். அதன்படி பாஸ்போர்ட், ஓட்டுநர்  உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை,  பான் அட்டை, உள்ளாட்சி அமைப்புகள் அளிக்கும் பிறப்புச் சான்றுகள், பள்ளியில் பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ், 10-ம்  வகுப்பு, 8ஆம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்பு  ஆகியவற்றை முடித்து அதனுடைய மதிப்பெண் சான்றிதழில் பிறந்த தேதி இருந்தால் அதன் நகல், வருமானவரி கணக்கு தாக்கல் செய்த விவரத்தின் நகல்,  இப்போதைய தண்ணீர் கட்டண ரசீது,  கியாஸ் இணைப்பு ரசீது ஆகியவற்றில்  ஏதேனும் ஒன்றின் நகல், விண்ணப்பதார ரின் பெயர், முகவரியிட்ட தபால் உறை ஆகியவற்றின் நகல்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.