திருநெல்வேலி, ஜூலை 28- நெல்லை மாவட்டம் தென்காசி யில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் சங்கத்தின் 9-வது மாநில மாநாட்டை முன்னிட்டு 2-வது நாளில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இசக்கி மகால் எதிரே ஆசாத் நகர் பாலம் அருகில் இருந்து மாநாட்டு பேரணி துவங்கியது. பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் (பொ) ஆ.செல்வம் துவக்கி வைத்தார். பேரணி மாநாட்டு திடலை வந்த டைந்தது. மாநாட்டிற்கு சங்க முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் வெ.சண்முக சுந்தரம் வரவேற்று பேசினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சங்க மாநிலத் தலை வர் எஸ்.ரமேஷ் மாநாட்டு தீர்மா னங்கள் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.குமார வேல், சங்க முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.வீரபாகு ஆகி யோர் வாழ்த்தி பேசினர். சங்கத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் பெ.கிருஷ்ணசாமி நிறைவுரையாற்றினார். சங்கத்தின் மூத்த தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரிய நடனமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பார்த்தசாரதி நன்றி கூறினார்.