விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
விக்கிரவாண்டி,அக்.19- விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் புகழேந்தியை ஆதரித்து கடைசி கட்டப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தொகுதி யில் பல்வேறு இடங்களில் திறந்தவாக னத்தில் சென்று வாக்குசேகரித்தார். எட்டாண்டுக் கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பதினைந்து ஆண்டுகள் பின் தங்கிய சூழ்நிலைக்குப் போய்விட்டது.இதனை மீட்டெடுக்க வேண்டிய முக்கிய காலகட்டத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கவுள்ளார்கள் என்று அவர் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், தமிழ் நாட்டில் ஒரு கொள்ளை கூட்டம் ஆட்சி நடத்துகிறது. அதற்குத் தலைவர் எடப்பாடி இல்லை எடுபிடி இருக்கிறார். மத்திய அரசு என்ன சொல்லுகிறதோ அதைக்கையை கட்டி வாயைப் பொத்தி அடிமை ஆட்சி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி யில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவோம். அதுபோல விரைவில் ராதாபுரம் தொகுதி வெற்றியை நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது. 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மாநிலம் 25 ஆண்டு பின்னோக்கி சென்று விட்டது. தொழில்துறை, விவசாயம், சுகா தாரம் எனப் பலதுறைகளில் தமிழகம் பின் தங்கிவிட்டது. முதல்வர் மற்றும் அமைச் சர்கள் பிரச்சாரத்தின் போது சாதனை களைத் திட்டங்களைச் சொல்லமுடியவில்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தான் காரணம் என ஒரு பொய்யை முதல்வரே சொல்கிறார். அது சுப்பிரமணிய சுவாமி போட்ட வழக்கு. பொள்ளாச்சி சம்பவம் மறக்க முடியாது. ஏறக்குறைய 750 இளம் பெண்களுக்கு பாலியல் கொடுமை 8 ஆண்டுகளாக நடந்து உள்ளது. இது காவல்துறைக்குத் தெரி யாதா? புலானாய்வுதுறைக்கு தெரியாதா? இதில் ஆளும் கட்சி இருப்பதால் கண்டும் காணாமல் இருக்கின்றனர். கோவையில் பெண் காவலர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்தனர். அதில் ஒருவர் பொள்ளாச்சி ஊரைச் சேர்ந்தவர். ஆனால் அந்த ஊரைச் சொல்லத் தயங்கினார்.
அதிமுக ஆட்சிக்கு மக்கள் ஐஎஸ்ஐ முத் திரை குத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பொள்ளாச்சி சம்ப வம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல், பேனர் விழுந்ததில் சாவு,நீட் தேர்வு எழுதிய மாணவிகள் 7 பேர் சாவு. இது தான் ஐஎஸ்ஐ ஆட்சியா? எனக் கேட்கவிரும்பு கிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் கொண்டு வந்த பெருமை திமுக வைச் சேரும். இது எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத பெருமை. நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா விலேயே யாரும் பெறமுடியாத வெற்றி யைத் தேடித் தந்து போல் இடைத்தேர்தலில் வெற்றியைத் தரவேண்டும்.இந்தி மொழி யை ஆட்சி மொழியாக்குவோம் என்ற மத்திய அரசின் முழக்கத்தைத் திரும்பப் பெற வைத்தது திமுக. தமிழகத்தில் ஊழல் ஆட்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, வன்னியர் இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு வழங்கப்படும், அதிமுக அரசு பற்றி பாமக மின்வாரிய தேர்வு உட்பட 24 ஊழல் குறித்து புகார் கொடுத்தது, குப்பையில் ஊழல் செய்யும் கேவலமான ஆட்சி அதிமுக ஆட்சி யாகும். பாமக ராமதாஸ் அதிமுக ஊதுகுழ லாக மாறி பேசி வருகிறார். முரசொலி பஞ்சமி நிலமானால் நிரூபித்தால் தண்டனைக்குத் தயார். பாமகவுக்கு நாடாளுமன்றத் தேர்த லில் நூற்றுக்கு நூறு தோல்வி தந்தார்களோ, அதேபோல இடைத்தேர்தலில் தருவார்கள் என்ற எனக்கு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.