tamilnadu

img

முதல் காலாண்டில் 841 கோடி லாபம் கண்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனம்

இந்தியாவில் பிரபலமான  வங்கி சாராத நிதி நிறுவனமான  (NBFC) முத்தூட் பைனான்ஸ். உண்மையில் சொல்லப்போனால் நகைக்கடன் என்றாலே இன்றும் பலருக்கும் நியாபகம் வருவது முத்தூட் பைனான்ஸ் தான். 

முத்தூட் பைனான்ஸ் தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.  இதில் நிறுவனத்தின் நிகரலாபம் 59 சதவீதம் அதிகரித்து, 841 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 530 கோடி ரூபாய் லாபத்தினை இந்த நிறுவனம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு தழுவிய ஊரகங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் எங்கள் கிளைகள் முற்றிலும் மூடப்பட்டன. ஆனாலும் எங்களின் வணிக தொடர்ச்சியினை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் டிஜிட்டல் சேவைகளை அதிகரித்தோம். சொல்லப்போனால் டிஜிட்டல் கடன் விநியோகத்தில் நான்கு மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளோம் என்று முத்தூட் பைனான்ஸின் எம் டி ஜார்ஜ் முத்தூட் கூறியுள்ளார்.