tamilnadu

img

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லையென்றால் அமெரிக்கர்கள் 2022 வரை ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.... 

வாஷிங்டன்:
கொரோனாவுக்கான மருந்து விரைவில் கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022?வரை சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் வெளியிட்டு உள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது," கோடைகாலத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்பது முரணானதாக உள்ளது.விரைவாக கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் கட்டாயம் ஊரடங்கை கடைபிடிப்பது அவசியம் என கூறப்பட்டு உள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் வைரஸ் அதன் அதிதீவிரத்தை வெளிப்படுத்தும்.

அதில், அந்த வைரஸ் தொற்று ஒருவேளை 2022ஆம் ஆண்டிற்குள் மறைந்துவிடும். ஆனால் மீண்டும் 2024ஆம் ஆண்டுக்கு பின் பரவலாம் என்று அதில், ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.மேலும், ஒருவேளை தற்போது நீடித்துவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீண்டும் நிச்சயம் வேகம் எடுக்கும்.

மக்கள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியாக மாறுகிறார்களா என்பதும் இன்னும் அறியப்படவில்லை. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பது தான் நல்லது. சமூக விலகலை அதிகரிப்பதன் மூலமே வைரஸ் தாக்கத்தைக் குறைக்க முடியும்.