சென்னை, ஜன. 3- ஊரக உள்ளாட்சித் தேர்த லில் ஆளும் கட்சியின் அதி கார துஷ்பிரயோகத்தை மீறி திமுக கூட்டணி பெற்ற வெற்றி தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள் ளார். அதன் விவரம் வரு மாறு:- அதிமுகவின் அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒரு தலை பட்ச அணுகுமுறையை மீறி ஊரக உள்ளாட்சித் தேர்த லில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எத்த கைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை மக்கள் சக்திக்கு உண்டு. ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத் துக்கு வந்துள்ளது. அமைச் சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டும், பணத்தை வாரியிறைத்தும் அ.தி.மு.க. பின்னடைவை சந்தித் துள்ளது நகர்ப்புற ஊராட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி இருந்தால் திமுக இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும். தமிழக வாக்காளர்கள் அனைவ ருக்கும் நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.