tamilnadu

img

ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 17 - திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பெரியகோளாப்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  ஜி. பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், சங்க உறுப்பினர்களுக்கு தெரியா மலேயே, கடன்களை பதிவேற்றம் செய்து கடன் தொகையை எடுத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கறவை  மாட்டுக் கடன் வழங்குவதற்கு விவசாயிகளி டம் லஞ்சம் வாங்கக் கூடாது, அனைத்து கடன்  களையும் வழக்கம் போல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்  கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலராமன், வெங்கடேசன், எஸ் ராமதாஸ், எஸ் ஆனந்தன், ஏ.செல்வம் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.