நதிநீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: முதல்வர்
சென்னை, மார்ச் 18 - தமிழக சட்டமன்றத்தில் கேரள முத லமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. கேரளத்துடனான நதிநீர் பிரச்ச னை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப் படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் புத னன்று (மார்ச் 18) பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடை பெற்றது. அதன் சுருக்கம் வருமாறு:
தங்கம்தென்னரசு (திமுக):
முல்லைப்பெரியாறில் 152 அடி நீர்த்தேக்க வேண்டுமானால் பேபி அணையை பலப்படுத்த வேண்டி உள்ளது. அங்குள்ள 23 மரங்களை அகற்றினால்தான் பணிகளை செய்ய முடியும். கேரள முதலமைச்சரோடு தமிழக முதலமைச்சர் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காண வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி:
பேபி அணையை பலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. 23 மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு அனுமதி தரவில்லை. ஏற்கெனவே மரத்தை வெட்டியதற்காக தமிழக அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களை கேரள வனத்துறை வழியாக கொண்டு செல்ல அனுமதி தர மறுக்கிறார்கள். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வந்த பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும்.
தங்கம் தென்னரசு:
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் தேனாறு, பாம்பாறு தமிழகத்திற்கு வரு கிறது. பட்டுச்சோலை எனுமிடத்தில் கேரள அரசு 2 டிஎம்சி நீரை தேக்கும் வகையில் தடுப்பணை கட்ட உள்ளது. காவிரி நதியின் உபநதி என்ற அடிப்படையில் இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
முதலமைச்சர்;
கேரள முதல்வருடன் நடத்திய பேச்சவார்த்தையில் பரம்பிக் குளம் -ஆழியாறு திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் எடுத்துக் கொள்ளப் பட்டது. கேரள முதல்வர் மனமுவந்து பிரச்சனையை தீர்க்க முன்வந்துள்ளார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் :
கேரள முதல்வருடன் நேரடியாக தமிழக முதல்வர் பேசுவது நல்ல நடைமுறை. கேரள முதலமைச்ச ராக இருந்த இஎம்எஸ், நேரடியாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி சிறுவாணி திட்டத்தை கொடுத்தார். பல முதலமைச்சர்களுடன் 7 அல்லது 8 முறை பேசியும் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. தற்போதுள்ள கேரள முதலமைச்சர் நல்லவர். பிரச்சனையை நன்கு அணுகக்கூடியவர். பொதுவுடைமை இயக்கத்தை சேர்ந்த உள்ளார்ந்த உரிமை கொண்டவர். எனவே நேரடி யாக கேரள முதல்வரோடு தமிழக முதல்வர் பேச வேண்டும்.
முதலமைச்சர்:
கேரளாவில் நல்ல முதலமைச்சராக இருக்கிறார். அதனடிப்படையில் பேச்சுவார்த்தை யை துவக்கியுள்ளோம். கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி பிரச்சனையை தீர்க்க முழு ஆர்வம் செலுத்துகிறார். கேரள எல்லையையொட்டியுள்ள தமிழக மக்களின் உணர்வுகளை, கோரிக்கை களை புரிந்து கொண்டு, நமக்கு துணை நிற்கிறார். தற்போது அதிகாரிகள் நடத்தி வரும் பேச்சுவார்த்தை சுமூக மாக நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முதலமைச்சர் அள விலான பேச்சுவார்த்தை நடைபெறும். பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது.
விஜயதாரணி (காங்):
நெய்யாறு இடதுகரை கால்வாய் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இப்பிரச்சனைக்கும் கேரள முதலமைச்சரோடு பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும்
முதலமைச்சர் ;
உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த விவாதம் நடை பெற்றது.