tamilnadu

img

ரத்த தானம் செய்ய முன்வாரீர் முதலமைச்சர் அழைப்பு

சென்னை, செப்.30- ரத்த தானம் செய்ய பொதுமக்கள் பெருமளவில் முன்வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டு கோள் விடுத்துள்ளார். ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்க ளிடையே ஏற்படுத்தும் வகை யில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த  தான நாளாக கடை பிடிக்கப்படுகிறது.  இது குறித்து முத லமைச்சர் எடப்பாடி பழனி சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9 லட்சத்து 16 ஆயிரத்து 929அலகுகள் ரத்தம் சேகரிக்கப் பட்டு, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. மேலும் ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் மீம்ஸ் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.