tamilnadu

img

‘பாஜக - சிவசேனையை வீழ்த்துவீர்! ’

சோலாப்பூர் பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசுகிறார்

சோலாப்பூர், அக். 20- மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்த லில் பாஜக - சிவசேனா கூட்டணியை வீழ்த்துவீர் என சோலாப்பூரில் நடை பெற்ற நிறைவுத் தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள் விடுத்தார். மகாராஷ்டிராவில் அக்டோபர் 21(இன்று) சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சோலாப்பூரில் நடைபெற்ற மாபெரும் நிறைவுப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சீத்தாராம் யெச்சூரி, பாஜகவும் சிவசேனாவும் மக்களின் உண்மையான வாழ்வாதார பிரச்சனை களை பேசாமல், அவர்களது கவனத்தை திசைதிருப்பும் பொருட்டு உணர்ச்சிப்பூர்வமான, மதவாத, இனவாத, வெறி உணர்வை தூண்டும் வகையிலான கோஷங்களை இந்தப் பிரச்சாரத்தில் எழுப்பியிருக்கிறார்கள்; இவர்களால் ஏழை-எளிய மகாராஷ்டிர மக்களின் வறுமை தீரப்போவதில்லை; சுமைகள் குறையப்போவதில்லை; மாநி லத்தின் ஆளுங்கட்சியான இந்தக் கூட் டணிதான் மத்தியில் ஆள்கிறது; இரண்டு ஆட்சியாளர்களும் நடத்தும் தாக்குதலி லிருந்து விடுதலைபெற இத்தேர்தலில் பாஜக - சிவசேனையை வீழ்த்துவது அவசியமாகும் என்று சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.