உதகை, ஜூன் 22- நீலகிரி மாவட்டம் கூடலூர் – பந்தலூர் பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேரளா விற்கு அரசுப் பணிகள் மற்றும் தனி யார் நிறுவனங்களில் பணியாற்ற செல்வோருக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை பாஸ் வழங்கிட வேண் டுமென மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் திங்களன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ் யாவிடம் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில் கூறியிருப்பதா வது, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களி லிருந்து பலர் தற்போது இ – பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா நோய்ப் பரிசோ தனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் நோய்த் தொற்று உள் ளதா என முடிவு வருவதற்குள் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தங்குகிறார்கள். ஒரு வேளை அவர்களுக்கு நோய்த் தொற்று இருந்தால் வீட்டில் இருக்கும் அனைவரும் பாதிக்கப் படுகின்றனர்.
எனவே இனி வெளி மாநிலங்கள் மற்றும் இதர மாவட் டங்களிலிருந்து வருபவர்களை நோய்ப் பரிசோதனை முடிவு வரும் வரையில் தனியார் விடுதிகளில் 50 சதவிகிதக் கட்டணத்தில் தங்க வைப்பதற்கான வகையில் மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வா கம் செய்ய வேண்டும். மாவட்டத் திற்குள் வருகை தருபவர்களை பரி சோதிப்பதற்காக அமைக்கப்பட் டுள்ள பர்லியார் மற்றும் குஞ்சப் பனை செக்போஸ்ட்களில் உள் ளூர் வாகனங்கள் மற்றும் வெளி யூர் வாகனங்கள் ஒரே இடத்தில் சோதனை செய்யப்படுகின்றன. இதனால் சோதனையின் போது பல குழப்பங்கள் ஏற்படுகிறது. எனவே வெளியூரிலிருந்து வரும் வாகனங்களை கல்லார் மற்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி பகுதிகளில் தனியாக சோதனை மேற்கொள்ளும் வகையில் மாற்று ஏற்பாடுகளை செய்திட வேண் டும். மாவட்டத்தில் தற்போது இயக் கப்படும் பேருந்துகளில் அனுமதிக் கப்பட்ட அளவை விட அதிகமான மக்கள் பயணம் செய்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்த பேருந்து நிலையங்களில் தற்காலிக பாஸ் பெற்றுக் கொள்ளும் நடை முறையை போக்குவரத்துக் கழகங் கள் மூலம் அமலாக்க வேண்டும்.
அரசாங்க உத்தரவரையும் மீறி பள்ளிக் கட்டணங்களை கட்ட பெற்றோர்களை நிர்பந்திக்கும் தனியார் பள்ளி மீது உரிய நடவ டிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இத்தகைய புகார்களை நேரடியாக தெரிவிக்கும் வகை யில் ஒரு ஹெல்ப் லைன் தொலை பேசி எண்ணை கல்வித் துறை மூலம் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு அரசுப் பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற செல்வோருக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பாஸ் வழங் கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டிருந்தது. முன்னதாக, இம்மனுவினை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர் பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்தனர்.