tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தர்ணா

உதகை, மார்ச் 5- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி உதகை யில் நடைபெற்று வரும் தொடர் தர்ணா  போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். நீலகிரி மாவட்டம், உதகையி லுள்ள பெரிய பள்ளிவாசல் முன்பு இஸ்லாமியர்கள் ஒன்றாக திரண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும் பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஆதரித்து  புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசினார்.   மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஜெ.ஆல்தொரை, உதகை இடைக் கமிட்டி உறுப்பினர்கள் சுரேஷ், நவீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த போராட்டத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.