tamilnadu

img

சாம்பவர்வடகரையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

திருநெல்வேலி, அக்.16- நெல்லை மாவட்டம் சாம்பவர்வட கரையில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத் தின் முதல் மாநாடு நடைபெற்ற இட மான சாம்பவர் வடகரையில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 1939ம் ஆண்டில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க உத விடும் வகையில் கேரள தலைவர் கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். தோழர் ராமச்சந்திர நெடுங்காடி நெல்லை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கும் பணியில் ஈடுபட்டார். நெடுங்காடி தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டி ருந்த தோழர்களை சந்தித்து விவாதித்தார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மூலமாகவும், தொழிலாளி வர்க்க போராட்டம் மூலமாகவும், வாலிபர் இயக்கத்தின் மூலமாகவும் மார்க்சிய கருத்துக்களின் தாக்கத்திற்கு ஆளான அனைவரையும் ஸ்தல அளவில் ஒன்று சேர்த்து கம்யூனிஸ்ட் கட்சி கிளை களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டார். ஐந்து இடங்களில் கட்சி கிளைகள் அமைக்கப்பட்டன. அண்ணாச்சி சங்கர நாராயணன், வி.மீனாட்சிநாதன், தள வாய், கே.பி.எஸ். மணி, ஏ.சுப்பையா, பாப்பாங்குளம் இசையானந்தம் பிள்ளை, ஐ.வி. ராமகிருஷ்ணன் ஆகி யோர் கட்சி உறுப்பினர்களாயினர். பின்னர் மேலும் பலர் உறுப்பினரா யினர்.

இதை தொடர்ந்து மாவட்ட முதல் மாநாடு சாம்பவர்வடகரையில் நடந்தது. 25 தோழர்கள் கலந்து கொண்டனர். முதல் மாநாடு தலை மறைவாகத்தான் நடந்தது. மாநாடு நடந்த இடம் கோவில்பிள்ளை என்ற ஆசிரியரின் வீடாகும்.  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற சாம்பவர் வடகரை யில் செவ்வாய்க்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூற்றாண்டை நினைவு படுத்தும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் நேதாஜி முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலாளர் அயூப்கான் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, தி.கணபதி, உ.முத்துபாண்டி யன் ஆகியோர் பேசினர்.  கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தோழர்களோடு பயணிக்கும்  மூத்த தோழரும் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான எஸ்.கே.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜாங்கம், மூத்த தோழர் சக்திவேல் மற்றும் தற்போது 90 வயதாகும் தோழர் உடையார் ஆகியோர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றனர். வட்டாரக் குழு உறுப்பினர் கண்ணன் நன்றி கூறினார்.