சென்னை, டிச. 24- அதிமுக நிறுவனரும், முன்னாள் முத லமைச்சருமான எம்ஜிஆரின் 32ஆவது நினைவுநாள் செவ்வாயன்று (டிச. 24) கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி மற்றும் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதாவிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடத்தின் அடிப்படையில், வீரத்து டனும் விவேகத்துடனும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டு அதிமுக வெற்றிபெற உழைப்போம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை அவர்கள் ஏற்றனர்.