தைவான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு ராணுவ மூத்த அதிகாரி உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
தைவானில் யூ.எச்-60 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, 13 ராணுவ அதிகாரிகளுடன் இன்று காலை புறப்பட்டு சென்றது. காலை 8.07 மணி அளவில், புறப்பட்டு சென்ற 13 நிமிடத்தில், நியூ டெய்பே நகரத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அந்நாட்டு ராணுவ மூத்த அதிகாரி ஜெனரல் சென் யி-மிங் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.