tamilnadu

img

கொரோனா தடுப்பூசி வருவதற்குள் 20 லட்சம் பேர் உயிரிழப்பர்...

ஜெனீவா:
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதற்குள் உலகம் முழுவதும்20 லட்சம் பேர் இறக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் 150 நாடுகள் ஈடுபட்டுள்ளது. மேலும் வெற்றிகரமான தடுப்பூசி பரவலாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் கொரோனா தொற்றால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லையென்றால் இன்னும் அதிகமாக இருக்கலாம். 20 லட்சம் இறப்புகள் என்பது கற்பனை செய்யக்கூடியது மட்டுமல்ல. துரதிர்ஷ்டவசமாக மிகவும் சாத்தியமானது என ஐ.நா.முகமையின் அவசரகால திட்டத் தலைவர் மைக் ரியான் வெள்ளிக்கிழமை நடைபெற்றமாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உயிரிழப்பு பத்து லட்சத்தை எட்டியுள்ளது. 3.16 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா என முன்னணி நாடுகள் பலவும் கொரோனாதடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை பல கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த ஆண்டிற்குள் நாட்டில் 100 கோடி டோஸ் தடுப்பூசியை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.