tamilnadu

img

வெயிலில் உட்கார்ந்தால் கொரோனா செத்துப் போகும்... மத்திய பாஜக அமைச்சர் அஸ்வின் குமார் சொல்கிறார்

புதுதில்லி:
மாட்டின் சிறுநீரை குடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் கொல்லப்படுகிறது; அதேபோல மாட்டுச் சாணத்தை உடம்பில் பூசிக்கொண்டாலும் கொரோனா வராது என்று ஆர்எஸ்எஸ், பாஜக,இந்து மகாசபையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மூச்சை இழுத்துப் பிடிப்பதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்கலாம்; நிறையத் தண்ணீர் குடிக்கும் போது,தொண்டையிலிருந்து வைரஸ் வயிற்றுக்கு அடித்துச் செல்லப்படும்; அப்போது வயிற்றில் இருக்கும் அமிலம் கொரோனாவை கொன்றுவிடும் என்றெல்லாம் கற்பனைக்கே எட்டாத கதைகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், “வெயிலில் உட்காருவதன் மூலம் கொரோனா வைரஸை கொன்று விடலாம்” என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வின் குமார் சவுபே ‘புதிய கண்டுபிடிப்பு’ ஒன்றை வெளியிட்டுள்ளார்.“காலை 11 மணி முதல் மதியம்2 மணி வரை வெயிலில் உட்கார்ந்திருந்தால் கொரோனா வைரஸ் செத்துவிடும். குறைந்தது 15 நிமிடமாவது பொதுமக்கள் வெயிலில் உட்கார வேண்டும். சூரியஒளி மூலம் வைட்டமின்-டி அதிகரிக்கும். அது கொரோனாவை கொன்று விடும்” என்று அள்ளி விட்டுள்ளார்.வதந்திகளை பரப்பக்கூடாது என அரசு அறிவுறுத்தி வரும்நிலையில், ஆளும் கட்சியின்அமைச்சர் அதுவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சரே இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.