tamilnadu

img

ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு பாதிப்பு...  கொரோனாவால் திணறும் அமெரிக்கா... 

நியூயார்க் 
கொரோனா என்னும் கொடிய நோயால் இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையமாக பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் என்றாலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் பசியினால் வாடி வருகின்றனர். ஆப்பிரிக்கா, ஓசியானிய கண்ட பகுதியை தவிர மற்ற கண்டங்களில் கொரோனா பரவல் வேகம் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. 

இந்நிலையில் உலகின் கொரோனா மையமாக உள்ள அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 71 ஆயிரத்து 787 பேர் புதிய கொரோனா நோயாளிகளாக மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.உலகில் வேறு எந்த நாடும் ஒரே நாளில் 70 ஆயிரத்து மேல் கொரோனா பாதிப்பை சந்தித்தது இல்லை. இதன்மூலம் அங்கு மொத்த  பாதிப்பு 32 லட்சத்து 92 ஆயிரத்து 786 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 849 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,36,671 ஆக உயர்ந்துள்ளது. 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது புளோரிடா மாகாணம் அமெரிக்காவின்  கொரோனா மையமாக உள்ளது. நேற்று அங்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.