புதுதில்லி:
உன்னாவ் சிறுமியின் தந்தை படுகாலை செய் யப்பட்ட வழக்கில், பாஜகமுன்னாள் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. அதனொரு பகுதியாக, சிறுமியின் தந் தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், “மருத்துவத்தில் தாங்கள் ஏற்றஉறுதிமொழிக்கு ஏற்பஅறத்துடன் செயல்படாமல் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.