அமெரிக்காவை தாயகமாக கொண்டு இந்தியாவில் செயல்படும் யூனிடஸ் வென்ச்சர்ஸ் நிறுவனமானது ,சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) -யிடம் இருந்து ரூ-75 கோடி அந்நிய முதலீட்டை பெற்றுள்ளது.இந்த நிறுவனமானது இந்தியாவில் புதுமையான கண்டுபிடிப்புகளை தொடங்குவதற்க்கும்,தொழில்நுட்ப வசதிகளை வழங்குவது போன்றவற்றிற்காக நிதியுதவிகளை வழங்குகிறது.
தற்போதை கொரோனா காலத்தில் அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருகிறது.இது இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும்,என்று பார்க்கப் பட்டாலும் ,இதனால் மக்களுக்கும்,சுற்றுச்சூழலுக்கும் ஆபத்துகள் வருமோ என்ற கேள்வி அனைவரிடமும் எழாமல் இல்லை.