லக்னோ:
இந்தியாவிலேயே முதல்முறையாக உத்தரப்பிர தேசத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான பல்கலைக் கழகம் தொடங்கப்பட உள்ளது.அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் குஷிநகரில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பி லிருந்து முதுகலை பட்டப் படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பி.எச்.டி. எனப்படும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக்கழகத்தில் பயிலலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாம் பாலினத்தவர் களால் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகள் வரும் ஜனவரி 15 அன்று இங்கு அனுமதிக்கப்படுவார்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என்று அறக்கட்ட ளையின் தலைவர் கிருஷ்ணமோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.