புதுதில்லி:
மாநிலங்களவையை இன்றோடு(புதன் கிழமை) காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற அலுவல் விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தகவல் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டதை தொடர்ந்து, அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் செவ்வாயன்று ஒரே நாளில் 7 மசோதாக்கள், மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறை வேறின.இந்நிலையில் மாநிலங்களவையை இன்றோடு (புதன்) காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.