சென்னை, ஏப்.18- நீட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுடைய விண்ணப்பத்தில் உள்ள பிழைகளைத் திருத்த வரும் மே மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் தேதியன்று 24ல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்ப டுத்தப்பட்டுள் ளதால் அனைத்து வகை கல்வி நிறு வனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறையா னது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதியன்று நடைபெற விருந்த நீட் நுழைவுத் தேர்வு தேதி குறிப்பிடப்படா மல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் பலர் தங்களின் விண்ணப்பங்களில் உள்ள பிழை களைத் திருத்தக் கூடுதல் அவகாசம் கேட்டு தேசிய தேர்வு முகமைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் இந்த கோரிக்கையை ஏற்று, விண்ணப்பப் பிழைகளைத் திருத்துதல் மற்றும் தேர்வு மையங்களைத் தேர்வு செய்வ தற்கான அவகாசத்தை மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை உத்தர விட்டுள்ளது. மேலும், நீட் நுழைவுத் தேர்வு கட்ட ணத்தை மே 3 ஆம் தேதி வரையில் செலுத்தலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.