tamilnadu

img

இந்தியாவுக்கு மட்டும் கெடுவை நீட்டித்த அமெரிக்கா

புதுதில்லி:

ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு அமெரிக்கா விதித்திருந்த கெடு, இந்தியாவிற்கு மட்டும் தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொள்வதற்கு, முன்பு, மே 2-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்த கெடு, தற்போது ஜூன் மாதம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால்- தேர்தல் முடிந்து புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரையிலும், நிர்வாக ரீதியில் பெரிதாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதன் அடிப்படையில், அமெரிக்கா கெடுவை நீட்டித்துள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்காவின் திடீர் முடிவு குறித்து விளக்கிய, அந்நாட்டின் வர்த்தக செயலாளர் வில்புல் ரோஸ், “கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான சில முக்கிய முடிவுகளை இந்தியாவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு எடுப்போம்” என்று கூறியுள்ளார்.


இதனிடையே, ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றி இந்தியா பரிசீலித்து வருவதாகவும், இது பற்றிய பெட்ரோலியத்துறை விரிவான திட்டத்தை வைத்திருப்பதாகவும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.