tamilnadu

img

பிரதமர் அறிவித்தது ‘சுயசார்பு பாரதம்’ திட்டமாம்!

மத்திய நிதியமைச்சர் விளக்குகிறார்

புதுதில்லி,மே 13- பிரதமர் நரேந்திர மோடி மே  12 அன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும்  வகையில் ரூ. 20 லட்சம் கோடிக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்தார்.  இந்நிலையில் பிரதமரின் அறிவிப்பு குறித்து தில்லியில் மே 13 புதனன்று மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உள்ள  5 தூண்களை வலுப்படுத்துவதே திட்டத்தின் நோக்கம். ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். சிறப்பு  திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினரு டன் அரசு ஆலோசனை நடத்தியது. தற்சார்பு இந்தியாவை  உருவாக்கும் நோக்கில் சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்படு கிறது. விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்ட ங்கள் செயல்படுத்தப்படும். தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். பொரு ளாதார கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற 5 தூண்களை  உருவாக்குவோம். மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டியிருக்கிறது. தொழிற்துறை வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பு, தொழிலாளர் வளம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தபடுகிறது; நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

நேரடியாக பணம் செலுத்தும் அரசின் திட்டம்  மூலம்  ஏழைகள் பயன்பெற்று வருகிறார்கள்; மின்துறை சீர்த்திரு த்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது. பிபிஇ கிட்டுகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் வேகம் அதிகரித்துள்ளது. உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங் களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம். ஜன்தன், ஆதார் மூலம், பயனாளிகளுக்கு  நிவாரணம் நேரிடையாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட  துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள் ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

அவரது அறிவிப்பில் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1  மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும்.

2 அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்.வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்.

3 ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறு வனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும். சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து, ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

4 ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறு வனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும். சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து, ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

5 குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியி லிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடி யிலிருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

6 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்.

7  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அட மானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்கப்படும். 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.  கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும்.இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்தக் கடன் வழங்கப்படும்.

8  ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் அக்டோபர் 31ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும். நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி துணைக்கடன் வழங்கப்படும்.

9  சிறு-குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். ரூ.100 கோடி வரை விற்று-முதல் காணும் நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தால் பயன்பெறும்.

10 ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது.  

11 71,700 மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

12 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இந்த கொரோனா என்கிற பேரிடர் வந்திருக்கிறது.

13 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இந்த கொரோனா என்கிற பேரிடர் வந்திருக்கிறது.

14 வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்.

15 நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்வு

16 பி.எப் தொகைக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. இதன் மூலம் 72.25 லட்சம் ஊழியர்கள் பயனடைவர். 

17 அடுத்த காலாண்டில் பி.எப். சந்தாவை  தொழிலாளர்கள், நிறுவனங்கள் 10 சதவிகிதம் செலுத்தினால் போதும். 

18 ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கும் பிஎஃப் தொகையை மத்திய அரசே செலுத்தும்.

19 அடுத்த காலாண்டில் பி.எப். சந்தாவை  தொழிலாளர்கள், நிறுவனங்கள் 10 சதவிகிதம் செலுத்தினால் போதும். 

20 குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது. 

21 நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்படுகிறது. 

22 மின்வாரியங்களுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

23 தேசிய நிதி மேம்பாட்டுக் கழகத்திற்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும்.

24 வங்கி சேவை இல்லாத நிதி நிறுவனங்களுக்கு சுமார் 30,000 கோடி ரூபாய் நிதி. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.