கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்
திருவனந்தபுரம், ஆக.24- திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கான தனது முடிவை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும் என அழைப்பு விடுத்து முதல்வர் பினராயி விஜயன் கேரள சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மா னத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 19.08.2020 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் மேலாண்மை மற்றும் மேற்பார்வையை அதானி நிறுவனங்களுக்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. திரு வனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் மேற்பார்வை மற்றும் செயல்பாட்டை கேரள அரசுக்கு பெரும் பங்கு உள்ள ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட நிறுவனத்திடம் (Special Purpose Vehicle) ஒப்படைக்க வேண்டும் என்ற மாநில அரசின் வலுவான கோரிக்கையை கருத்தில் கொள்ளாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில அரசு பிரதமர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு அந்தந்த காலங்களில் நேரடி யாகவும் கடிதம் மூலமும் கொண்டு சென்றுள்ளது. ஏலத்தில் தனியார் நிறுவனம் அதிக தொகையை மேற்கோள் காட்டி யிருப்பதைக் கருத்தில் கொண்டு அதே தொகையை வழங்க மாநில அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரி விக்கப்பட்டது. இதையெல்லாம் புறக் கணித்து மத்திய அமைச்சரவை இப்போது இந்த முடிவை எடுத்துள்ளது. 2003ஆம் ஆண்டில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மாநில அரசுக்கு அளித்த உறுதிமொழியில். மாநில அரசு அளித்த பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டு விமானநிலையத்தின் வளர்ச்சிக்காக சிறப்பு நோக்க நிறுவனத் திடம் (எஸ்பிவி) ஒப்படைப்பதாக தெரிவித் திருந்தார்.
கொச்சி சர்வதேச விமானநிலையம் மற்றும் கண்ணூர் சர்வதேச விமானநிலை யத்தை பொது-தனியார் கூட்டாண்மை மூலம் வெற்றிகரமாக இயக்கிய அனுபவம் மாநில அரசுக்கு உண்டு. இருப்பினும், திருவனந்த புரம் சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக மும் செயல்பாடும் இப்போது அத்தகைய அனுபவம் இல்லாத ஒரு தனியார் தொழில் முனைவோருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலை யத்திற்கு, முன்பு திருவிதாங்கூர் சமஸ்தான த்தால் வழங்கப்பட்ட ராயல் பிளையிங் கிளப்பின் 258.06 ஏக்கர் நிலம் விமானநிலை யத்தின் 636.57 ஏக்கர் பரப்பளவினுள் அடங்கி யுள்ளது. அதன் பின்னர், மாநில அரசு திரு வனந்தபுரம் விமான நிலைய மேம்பாட்டுக் காக 32.56 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி யுள்ளது. தற்போது மாநில அரசு ரூ.250 கோடி மதிப்புள்ள 18 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில அரசு இலவசமாக கையகப்படுத்திய நிலத்தின் விலையை எஸ்.பி.வியில் மாநில அரசின் பங்காகக் கருத வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இந்த நிலம் வழங்கப்பட்டது.
ஏலத்துக்கு பிறகு, விமானநிலையத்தை தனியார்மயமாக்கியதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு மற்றும் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இதை பரிசீலித்து பிறப்பித்த உத்தரவில், இதில் மத்திய - மாநில அரசுகளுக்கு தொடர்புள்ளதால், மனுவின் அசல் அதிகார வரம்பு அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்திற்கானது என்று தீர்ப்பளித் தது, மத்திய அரசு விமான ஆணையம் அளித்த பரிந்துரையின்படி டெண்டர் நடவடிக்கைகளை நிறைவு செய்யவில்லை எனவும் இத்தீர்ப்பு விமர்சித்துள்ளது.
மாநில மக்களின் உணர்வு
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு உள்ளிட்டோரால் மேல்முறை யீடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இவ்வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடை யில், 19.08.2020 அன்று மத்திய அமைச்சரவை யில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திரு வனந்தபுரம் சர்வதேச விமானநிலையத்தை தனியார்மயமாக்கும் முடிவு கேரள மக்களின் பொதுக்கருத்துக்கு இணக்க மானது அல்ல என்று, பிரதமருக்கு கடிதம் மூலம் 19.08.2020 அன்று தகவல் தெரி விக்கப்பட்டது.
விமான நிலையம் பொதுத்துறையில் இருந்தபோது வழங்கப்பட்ட உதவிகளை, மாநில அரசின் வலுவான கருத்துக்கு மாறாக தனியார்மயமாக்கப்பட்ட விமானநிலை யத்திற்கு நீட்டிக்க முடியாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 20 ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை காணொலி மூலம் முதல்வர் கூட்டினார். கூட்டத்தில் எழுப்பப்பட்ட பொது உணர்வு பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதத்தின் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் வழங்க முன்வந்த பணத்தை செலுத்த மாநில அரசு ஒப்புக் கொண்ட போதிலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார்மய மாக்கும் முடிவுக்கு எந்த நியாயமும் இல்லை. மாநிலத்தின் பொது நலன் மற்றும் மாநில அரசின் தலையீடு, பெரும்பான்மை யான அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 19, 2020 தேதியிட்ட மத்திய அரசின் முடிவை மறு பரிசீலனை செய்யவும், திருவனந்தபுரம் விமான நிலையத்தின் மேற்பார்வையையும் செயல்பாட்டையும் மாநில அரசின் பங்களி ப்புடன் கூடிய எஸ்.பி.வி.க்கு மாற்றவும் கேரள சட்டமன்றம் ஒருமனதாக மத்திய அரசைக் கோருகிறது என கூறப்பட்டுள்ளது. முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது.