tamilnadu

img

குழந்தைகளை பலியாக்கும் கோல்டுபெஸ்ட் பிசி மருந்துக்கு தடை

புதுதில்லி:
குழந்தைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சுப்பொருள் உள்ளதால் கோல்டுபெஸ்ட் பிசி ( Coldbest PC) என்றஇருமல் சிரப் மருந்தை விநியோகிக்கவோ, விற்கவோ, வாங்கவோ கூடாது என்று அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த மருந்தை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மருந்தில் உள்ள (Diethylene Glycol) டைஎத்திலின் கிளைக்கால் என்ற நச்சுப்பொருள், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் 9 சிறார்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியதாக ஆய்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஜம்மு-கஷ்மீர் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுப்பிய சுற்றறிக்கை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.அதில் கோல்டுபெஸ்ட் பிசி இருமல் சிரப் மருந்தில் நச்சுப்பொருள் இருப்பதால், இந்த மருந்தை  வாங்கவோ, விற்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.