tamilnadu

img

ஹெலிகாப்டரில் இறக்கப்பட்ட மர்மப் பெட்டி

புதுதில்லி, ஏப்.14-பிரதமர் மோடி கடந்த வாரம் கர்நாடகத்தில் பிரச்சாரம் செய்ய வந்தபோது, அவரது ஹெலிகாப்டரில் இருந்து கறுப்பு நிறப்பெட்டி ஒன்று இறக்கப்பட்டு, காரில் ஏற்றப் பட்டது. ஆனால், அந்தகார் பிரதமர் மோடியின்பாதுகாப்பு அணிவகுப் பில் இடம்பெறவில்லை. இந்நிலையில், பெட்டியில் இருந்தது என்ன?அந்த கார் யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.