tamilnadu

img

இன்று நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டம் மற்றும் 7-வது கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் மே 19 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 


நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில் இதுவரை6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் மே 19 ஞாயிற்றுகிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில்4, சண்டிகர் தொகுதி என 59 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறைகாரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வியாழனன்று இரவுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மீதமுள்ள 50 தொகுதிகளில் வெள்ளி யன்று மாலை தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. 


நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளான வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


சட்டமன்ற இடைத்தேர்தல்

தமிழகத்தில் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் முடிந்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கும் ஞாயிறன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை தேர்தல்ஆணையம் மேற்கொண்டுள்ளது.


சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுஆகிய தேர்தல் பணிகளில் 5,508 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். மாவட்ட தேர்தல் நடத்தும்அதிகாரிகளுடன் சத்தியபிரதா சாகுகாணொலிகாட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.