புதுதில்லி:
நிதி அமைச்சகத்துக்கு பதிலாக அமலாக்கத் துறையை மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே கூறியுள்ளார். இந்தியத் தண்ட னை சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழான நடவடிக்கைகள் அனைத்தும் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருபவைஎன்பதால், அமலாக்கத் துறையை உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.